வழிபாடு

சமயபுரம் மாரியம்மன்-திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் நடை இன்று சாத்தப்படும்

Update: 2023-02-04 06:38 GMT
  • சமயபுரம் கோவில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படும்.
  • திருப்பைஞ்சீலி கோவில் நடை நாளை மாலை திறக்கப்படும்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) காலை மாரியம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர் பெறுவதற்காக வட திரு காவிரிக்கு செல்கிறார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை 3.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த தகவலை கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்துள்ளார்.

இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் தைப்பூசத்திற்காக கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரிக்கு இன்று (சனிக்கிழமை) காலை செல்கிறார். அதனையொட்டி இன்று கோவில் நடை சாத்தப்படும். மேலும் இன்று கல்வாழை பரிகாரம் மற்றும் எமதர்மருக்கு சிறப்பு பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெறாது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமியை வணங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தகவலை இக்கோவில் செயல் அலுவலர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News