வழிபாடு

நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

Update: 2023-05-30 07:30 GMT
  • 7-ந்தேதி மரத்தேரோட்டம் நடக்கிறது.
  • 8-ந்தேதி சக்கர ஸ்நானம் மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.

திருப்பதி மாவட்டம் நாராயணவனம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (புதன்கிழமை) தொடங்கி 8-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.

அதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பண நிகழ்ச்சியின் பாரம்பரிய சடங்குகளான புண்ய ஹவச்சனம், மிருத்ய கிரஹணம் மற்றும் சேனாதிபதி உற்சவம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை கொடியேற்றம், இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 1-ந்தேதி காலை சின்ன சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதி, 3-ந்தேதி காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா, 4-ந்தேதி காலை பல்லக்கு வாகனத்தில் மோகினி அவதாரத்தில் வீதிஉலா, இரவு கருட வாகன வீதிஉலா.

5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை மரத்தேரோட்டம், மாலை கல்யாண உற்சவம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம் மற்றும் இரவு கொடியிறக்கம் நடக்கிறது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

பிரம்மோற்சவ விழாவையொட்டி திருப்பதி தேவஸ்தானத்தின்கீழ் செயல்படும் இந்து தர்மா பிரசார பரிஷத், தாச சாகித்ய திட்டம் மற்றும் அன்னமாச்சாரியார் திட்ட கலைஞர்கள் 9 நாட்களும் பஜனைகள், கோலாட்டம் போன்ற கலாசார நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.

Tags:    

Similar News