வழிபாடு
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தெப்பகுளத்தில் திருஞானசம்பந்தர் விழா: திரளான பக்தர்கள் தரிசனம்
- அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- தேரோட்டம் 3-ந் தேதி நடக்கிறது.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் 3-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி அதிகாலை அதிகார நந்தி காட்சி மற்றும் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நடந்தது. சாமிக்கு தீர்த்தவாரி, அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் தினமும் காலை பொழுதில் கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்ளி விடை வாகனங்களிலும், இரவு வெள்ளி பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களிலும் சாமி, அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் 3-ந் தேதியும், 63 நாயன்மார்கள் திருவீதி உலா மற்றும் திருஞானசம்பந்தர் சாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.