வழிபாடு

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் அக்டோபர் 16-ந்தேதி தேரோட்டம்

Published On 2022-09-23 08:49 GMT   |   Update On 2022-09-23 08:49 GMT
  • 10 நாள் திருவிழா 7-ந்தேதி தொடங்குகிறது,
  • 14-ந்தேதி திருக்கல்யாண நாள் விழா நடக்கிறது.

அன்று மதியம் பணி விடை, உச்சிபடிப்பு நிகழ்ச்சியும் மாலையில் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். இதில் பா.ஜனதா தேசிய பொதுக் குழு உறுப்பினர் எம்.என். ராஜா பங்கேற்கிறார்.

8-ந்தேதி இரவு அன்ன வாகனத்தில் அய்யாபதி வலம் வருகிறார். இதில் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்கிறார். 9-ந்தேதி இரவு செண்டை மேளத்துடன் கருட வாகனத்தில் அய்யா நகர்வலம் வருகிறார்.

இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். 10-ந்தேதி இரவு மயில் வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். இதில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார். 11-ந்தேதி இரவு ஆஞ்ச நேயர் வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். இதில் சுதர்சனம் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார். 12-ந்தேதி சர்ப்ப வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார்.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களில் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொள்கிறார். 13-ந்தேதி இரவு மலர் முக சிம்மாசன வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். இதில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொள்கிறார். 14-ந்தேதி திருக்கல்யாண நாள் விழா நடக்கிறது.

இதில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். 15-ந்தேதி காமதேனு வாகனத்தில் அய்யா பதிவலம் வருகிறார். இதில் காடுவெட்டி எஸ்.தியாக ராஜன் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார். 10-ம் நாள் விழாவான அக்டோபர் 16-ந்தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை ஆளுனருமான டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் தேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்கிறார்.

இதில் தமிழ்நாடு பனை மர தொழிலாளர்கள் சங்க நலவாரிய தலைவர் எர்ணா வூர் நாராயணன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆர். ஜெயதுரை உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

Tags:    

Similar News