வழிபாடு
null

Mahalakshmi Moola mantra: சொல்ல வேண்டிய மகாலட்சுமி மூல மந்திரம்

Published On 2023-07-07 09:50 IST   |   Update On 2025-08-25 13:26:00 IST
  • தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.
  • தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம்.

வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு உரிய நாள். விரதம் இருந்து சக்தியை வணங்க வேண்டிய அற்புதமான நாள். அதனால்தான் வெள்ளிக்கிழமையை, மங்கலகரமான செயல்களில் ஈடுபடுத்திக் கொண்டு அம்பிகையைக் கொண்டாடுகிறோம்.

வெள்ளிக்கிழமை என்றில்லாமல், தினமும் மகாலக்ஷ்மியின் மூல மந்திரத்தை சொல்லி வழிபடலாம்.

வீட்டில் விளக்கேற்றுங்கள். அம்பாளுக்கு செந்நிற மலர்கள் சூட்டி அலங்காரம் செய்யுங்கள்.

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி

மஹாலக்ஷ்மி ஏய்யேஹி

ஏய்யேஹி சர்வ

ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா

எனும் மந்திரத்தைச் சொல்லுங்கள்.

இதேபோல்,

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் கமலே

கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத

ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம;

என்கிற மந்திரத்தைச் சொல்லுங்கள்.

அம்பாள் படத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். கோலமிடுங்கள். நெய் தீபமேற்றுங்கள்.

அம்பாள் படத்துக்கு முன்னே, கண்கள் மூடி அமர்ந்து, இந்த மந்திரங்களைச் சொல்லுங்கள். தினமும் 11 முறை அல்லது 16 முறை சொல்லலாம். 108 முறையும் சொல்லலாம். அப்போது குங்குமம் கொண்டும் அர்ச்சிக்கலாம். இன்னும் விசேஷம். மாங்கல்ய பலம் கிடைக்கப் பெறுவீர்கள்.

Tags:    

Similar News