வழிபாடு

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் பாலாலயம் வருகிற 24-ந் தேதி தொடங்குகிறது

Published On 2023-03-22 06:32 GMT   |   Update On 2023-03-22 06:32 GMT
  • கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது.
  • இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் மகாமக விழா உலக அளவில் பிரசித்திப்பெற்றதாகும்.

இந்த கோவிலில் மந்திர பீடேஸ்வரி என்கிற மங்களாம்பிகை அம்பாளுடன் ஆதி கும்பேஸ்வர சாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழமையான இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கோவில் விமான பாலாலய விழா வருகிற 24-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு 24-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யா யாகவாசனம், கணபதி ஹோமம் மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்குகிறது. தொடர்ந்து 25-ந் தேதி கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்ட பூஜைகளும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

26-ந் தேதி 3-ம் கால யாகசாலை பூஜைகளும், 27-ந் தேதி நான்காம் கால யாகசாலை பூஜைகளும் நடக்கிறது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விமான பாலாலய விழா குழுவினர் மற்றும் மந்திரபீடேஸ்வரி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News