வழிபாடு

வடபழனி கோவிலில் ஆடி மாத சிறப்பு வழிபாடு

Published On 2022-07-21 08:07 GMT   |   Update On 2022-07-21 10:25 GMT
  • ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
  • ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம், அகண்ட பஜன் நடைபெற உள்ளது.

சென்னை, வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் ஆடிமாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடக்கிறது.

ஆடி முதல் வெள்ளிக் கிழமையான நாளை காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் புடவை சாத்தி மஞ்சக்காப்பு அலங்காரம் நடக்கிறது. பின்னர் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஞ்சக் காப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 6 மணிக்கு லலிதா சஹஸ்ரநாம பாராயணம், 6.30மணிக்கு சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய சரடு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் 7 மணிக்கு கலைமாமணி பாரதி திருமகன் குழுவினர் வழங்கும் வில்லுப்பாட்டு கச்சேரி நடக்கிறது.

3-வது வெள்ளிக்கிழமையான ஆகஸ்ட் 5-ந் தேதி மாலை, உற்சவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து திருவிளக்கு பூஜை நடத்தப்படுகிறது.

இதில், பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு அபிஷேகம், அன்னதானம் மற்றும் பூஜை முடிந்ததும் சுமங்கலி பெண்களுக்கு அம்மன் பிரசாதமாக மாங்கல்யம் வழங்கப்படுகிறது.

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ரநாமம், அகண்ட பஜன் நடைபெற உள்ளது.

Tags:    

Similar News