வழிபாடு

புதுவை கடற்கரையில் கேரள மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த காட்சி.

ஆடி அமாவாசையொட்டி புதுச்சேரி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த கேரள மக்கள்

Published On 2023-07-17 05:34 GMT   |   Update On 2023-07-17 05:46 GMT
  • கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர்.
  • பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள்.

ஆடி அமாவாசையை மிக புனித நாளாக கருதி முன்னோர்களுக்கு புண்ணிய ஸ்தலம், கடற்கரை மற்றும் நதிக்கரையில் சிறப்பு பூஜை செய்து தர்ப்பணம் செய்வது இந்துக்களின் வழக்கம்.

கேரளாவில் ஆடி அமாவாசையை 'கர்கடக வவுபலி' என்று அழைக்கின்றனர். கேரள மாநிலத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் 'கர்கடக வவுபலி' என்ற பெயரில் புண்ணிய நாளாக கருதுகின்றனர். பூமியில் ஒரு ஆண்டு என்பது முன்னோர்களுக்கு ஒரு நாள். தட்சிணாயனத்தில் பித்ருக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த முதல் அமாவாசை கர்கடகம். அதனால் தான் 'கர்கடக வவுபலி' முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனையொட்டி கேரள சமாஜம் சார்பில் ஆடி அமாவாசையான இன்று புதுவை கடற்கரை சுற்றுலா வளர்ச்சி கழகம் விடுதி அருகே சிறப்பு புண்ணிய நாள் கடைபிடிக்கப்பட்டது. கேரள நம்பூதிரிகளை கொண்டு நடந்த பூஜையில் தமிழகம் மற்றும் புதுவையை சார்ந்த 400-க்கும் மேற்பட்ட கேரள மக்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

ஆண்டுதோறும் புதுவையில் இந்த புண்ணிய நாளை கேரள சமாஜம் கொண்டாடுவதாக புதுச்சேரி கேரள சமாஜம் தலைவர் சங்கர் தெரிவித்தார்.

இதேபோல இந்துக்களும் புதுவை கடற்கரை சாலையில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

Tags:    

Similar News