வழிபாடு
சூலக்கல் மாரியம்மன்

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் இன்று தேரோட்டம்

Published On 2022-05-26 05:01 GMT   |   Update On 2022-05-26 05:01 GMT
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா, 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 24-ந் தேதி முதல் தினமும் காலை, மாலை நேரங்களில் மாரியம்மன் சப்பரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று காலை சூலக்கல் பகுதியை சேர்ந்த பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. 2-ம் நாள் தேரோட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மாலை 4.35 மணிக்கும், 3-ம் நாள் தேரோட்டம் 28-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 5 மணிக்கும் நடைபெறுகிறது. வருகிற 29-ந் தேதி மகா அபிஷேகத்துடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News