வழிபாடு
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்

Update: 2022-04-16 07:27 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொேரானா பரவல் காரணமாக சித்திரை பிரம்மோற்சவ திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 7-ந் தேதி சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் தனித்தனி தேரில் காலை எழுந்தருளும் நிகழ்ச்சியும், இதனை தொடர்ந்து காலை 9.35 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது.

4 ரத வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் மக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News