வழிபாடு
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

Update: 2022-03-07 11:13 GMT
பங்குனி உத்திர திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் ஏகாம்பரநாதர் சுவாமி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் சிறப்பு வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 21-ந் தேதி வரை விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி நாளை மாலை சிம்ம வாகனமும் 9-ந் தேதி காலை சூரிய பிரபை, மாலை சந்திர பிரபை வாகனத்திலும், 11-ந் தேதி மாலை வெள்ளி இடப வாகனத்திலும் சுவாமி வீதி உலா வருகிறார்.

வருகிற 13-ந் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதி உலா வருகின்றனர். அன்று மாலை வெள்ளித் தேரில் ஏகாம்பரநாதர் பவனி வருகிறார்.

17-ந்தேதி பங்குனி உத்திர திருக்கல்யாண விழா விமரிசையாக நடைபெற உள்ளது. 21-ந் தேதி காலை 108 கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் விழா நடக்கிறது. விழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் ஏகாம்பரநாதர் சுவாமி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் உதவி ஆணையர் முத்துரத்தினவேல் மற்றும் கோயில் செயல் அலுவலர் தியாகராஜன் செய்து உள்ளனர்.
Tags:    

Similar News