வழிபாடு
முப்பந்தல் ஆலமூடு இசக்கியம்மன் கோவில் பக்தர்கள் சீர்வரிசை கொண்டு வந்தபோது எடுத்த படம்.

மண்டைக்காடு பகவதி அம்மன் வெள்ளி பல்லக்கில் இன்று பவனி

Published On 2022-03-01 08:58 IST   |   Update On 2022-03-01 08:58:00 IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆலமூடு இசக்கியம்மன் கோவில் பக்தர்கள் மண்டைக்காடு பால்குளம் கண்ட சாஸ்தான் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வந்தனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 8 மணிக்கு பக்தி பஜனை, 10 மணிக்கு கம்பராமாயண விளக்கவுரை, 11.30 மணிக்கு முப்பந்தல் ஆலமூடு இசக்கியம்மன் கோவில் பக்தர்கள் மண்டைக்காடு பால்குளம் கண்ட சாஸ்தான் கோவிலில் இருந்து அம்மனுக்கு சீர் வரிசை கொண்டு வந்தனர். மதியம் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு ஹைந்தவ (இந்து) சேவா சங்க பொருளாளர் சசிதரன் தலைமையில் சமய மாநாடு, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.

இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல். பகல் 11 மணிக்கு சமய மாநாடு, மதியம் 1 மணிக்கு உச்சகால பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல் ஆகியவை நடக்கிறது.

Similar News