ஆன்மிகம்
பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்த லீலை அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்

பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்த லீலை அலங்காரத்தில் அருள்பாலித்த மீனாட்சி அம்மன்

Published On 2021-10-13 13:27 IST   |   Update On 2021-10-13 13:27:00 IST
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவின் 6-ம் நாளில் பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்த லீலை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நவராத்திரி உற்சவ விழா 17-ம் தொடங்கியது. இந்த விழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

நவராத்திரி திருவிழா நாட்களில் தினசரி மாலை 6 மணி இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்கு திரை போட்டு அபிஷேகம், அலங்காரம் ஆகி கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அந்த நேரத்தில் அர்ச்சனைகள் மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. எனவே பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை மட்டும் தரிசித்து சென்றனர். மேலும் அர்ச்சனை கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்கு செய்யப்பட்டது.

நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் உற்சவர் மீனாட்சி அம்மன் எழுந்தருளி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் காட்சி தருவார்.

நவராத்திரி விழாவின் 2-ம் நாளான 9-ம்தேதி மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.

நவராத்திரி திருவிழாவின் நான்காம் நாளான 10-ம் தேதி, மீனாட்சி அம்மன் திருநீலகண்ட யாழ்ப்பாணருக்கு தங்கப்பலகை கொடுத்த அலங்காரத்தில் கொலு வீற்றிருந்தாள்.

நவராத்திரி விழாவின் 5-ம் நாளான 11-ம்தேதி சங்கீத சியாமளா அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் கொலுவீற்றிருந்தார்.

நவராத்திரி 6-ம் நாள் விழாவில் நேற்று பாணபத்திரருக்கு திருமுகம் கொடுத்த லீலை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Similar News