ஆன்மிகம்
திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோவிலில் நவராத்திரி 6-ம்நாள் விழா

திருப்பரங்குன்றம், கள்ளழகர் கோவிலில் நவராத்திரி 6-ம்நாள் விழா

Published On 2021-10-13 11:19 IST   |   Update On 2021-10-13 11:19:00 IST
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா அரசு வழிகாட்டுதல் படி நேற்று 6-வது நாளாக நடந்தது. மூலவர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நவராத்திரி திருவிழா அரசு வழிகாட்டுதல் படி நேற்று 6-வது நாளாக நடந்தது. இதில் அங்குள்ள கொலு மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மூலவர் சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலையில் ஊஞ்சல் அலங்காரத்தில் கல்யாணசுந்தரவல்லி தாயார் பூமாலைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

மேளதாளம், பட்டர் களின் வேத மந்திரங்கள் முழங்க விஷேச பூஜைகள், தீபாராதனை நடந்தது. கொரோனா கட்டுப்பாடுகளினால் பக்தர்கள் அனுமதியின்றி இந்த விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். இதேபோல நவராத்திரி விழாவையொட்டி திருப்பரங்குன்றம்முருகன் கோவிலில் கோவர்த்தனாம்பிகை கலைவாணிசரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Similar News