ஆன்மிகம்

ஆயுத பூஜையை கொண்டாடுவோம்

Published On 2021-10-14 02:30 GMT   |   Update On 2021-10-13 05:06 GMT
வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை. எனவே ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவோம்.
ஆயுதபூஜை திருநாளில் உயிர்பொருட்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் நிறைந் திருக்கிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதமாக அவற்றையும் இறைபொருளாக பாவித்து வணங்குவதே ஆயுத பூஜை. இந்த நாளில் சிறிய கரண்டி முதல் தொழில் எந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

தேவைப்பட்டால் அவற்றுக்கு வண்ணமும் தீட்டலாம். மலர் மாலைகள் கொண்டு நம் தொழிலுக்கு உதவும் எந்திரங்களையும் அலங்கரிக்கலாம். பின்னர் சாமி படங்களை பூஜை செய்யும் இடத்தில் வரிசையாக வைத்து மலர் மாலைகள் போட வேண்டும். விநாயகரை பூஜையில் வைத்த பின்னரே ஆயுதபூஜையை தொடங்க வேண்டும்.

எந்திரங்கள் மற்றும் சாமி படங்கள் முன்பு வாழை இலையை வைத்து அதில் பொரி, கடலை, அவல், நாட்டுச்சர்க்கரை, பலவகையான பழங்களை வைத்து வழிபடலாம். பிறகு எந்திரங் களுக்கு பொட்டு வைத்து தேங்காய் உடைத்து பூஜை செய்தபின் அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்கு பயன் படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பு ஆகும்.

மேலும், ஆயுத பூஜையன்று தினம் நம்மை சுமந்து செல்லும் வாகனங்களையும் சுத்தப்படுத்தி மலர்மாலை அணிவித்து பொட்டிட்டு மரியாதை செலுத்தி வருகிறோம். எனவே ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடுவோம்.
Tags:    

Similar News