ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடக்கம்

Published On 2021-10-07 04:53 GMT   |   Update On 2021-10-07 04:53 GMT
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று தொடங்குகிறது. அம்புபோடும் நிகழ்ச்சியை உள்திருவிழாவாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று (7-ந்தேதி) தொடங்குகிறது. மேலும் வருகின்ற 15-ந்தேதி வரை தொடர்ந்து திருவிழா நடக்கிறது. இதையொட்டி கோவிலுக்குள் கம்பத்தடி மண்டபத்தில் சுவாமி புறப்பாடு செய்யக்கூடிய அனைத்து வாகனங்களும் கொலுபொம்மைகளாக வைக்கப்படும். மேலும் கோவர்தனம்பிக்கைக்கு தினமும் ஒரு அலங்காரம் செய்யப்படுகிறது.

இன்று (வியாழக்கிழமை) ராஜராஜேஸ்வரி, நாளை (8-ந்தேதி) ஊஞ்சல், 9-ந்தேதி பட்டாபிஷேகம், 10-ந்தேதி திருக்கல்யாணம், 11-ந்தேதி தபசு காட்சி, 12-ந்தேதி மகிஷாசுரவர்த்தினி, 13-ந்தேதி சிவபூஜை, 14-ந்தேதி சரஸ்வதி பூஜை என்று தினமும் அலங்காரம் செய்யப்படுகிறது.

திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதற்காக பசுமலையில் உள்ள அம்புபோடும் மண்டபத்திற்கு ஆண்டுதோறும் தங்க குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் புறப்பட்டு செல்வது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கால் அம்பு போடும் மண்டபத்தில் அம்புபோடும் நிகழ்ச்சி தவிர்க்கப்படுகிறது.இதே சமயம் வருகின்ற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அம்பு போடும் உற்சவம் கோவிலுக்குள் உள்ள திருவாச்சிமண்டபத்தில் உள்திருவிழாவாக நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News