ஆன்மிகம்
திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. கொடியேற்றத்துக்கு பயன்படுத்தும் தர்ப்பை பாய், கயிறு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பிரம்மோற்சவத்தின் போது கொடி ஏற்றுவதற்கு தர்ப்பை பாய் மற்றும் கயிறு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாளை கொடியேற்றம் நடக்க இருப்பதை முன்னிட்டு நேற்று வராஹசுவாமி விருந்தினர் மாளிகையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் இருந்து வனத்துறை அலுவலர் சீனிவாசு ரெட்டி மற்றும் ஊழியர்களால் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
பின்னர், கோவிலின் ரங்கநாய்குலா மண்டபத்தில் சேஷவாகனத்தின் மீது பாய் மற்றும் கயிறு வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வன ஊழியர்கள் வடமலை பேட்டையை சுற்றியுள்ள வயல்களில் வளரும் இந்த தர்பையை சேகரித்து திருமலைக்கு கொண்டுவந்து வெயிலில் ஒருவாரம் உலர வைத்து, சுத்தம் செய்து பாய் மற்றும் கயிறாக தயாரிக்கிறார்கள்.