ஆன்மிகம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2021-10-05 03:14 GMT   |   Update On 2021-10-05 03:14 GMT
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ளமுத்தாரம்மன் கோவில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 10-ம் திருவிழாவான வருகிற 15-ந் தேதி நள்ளிரவில் நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டும் சூரசம்ஹாரம் கடற்கரைக்கு பதிலாக கோவில் முன்பு நடைபெறுகிறது.

இதை காண்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவிழா நடைபெறும் 12 நாட்களிலும் வருகிற 7, 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரை மற்றும் கோவிலை சுற்றி எந்த விதமான கலை நிகழ்ச்சிகள், தற்காலிக கடைகள் வைக்கக்கூடாது.

மேளதாளங்களுடன் தசரா பக்தர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது. தேங்காய், பழம், பூ போன்ற அர்ச்சனை பொருட்களை கொண்டு வரக்கூடாது. பக்தர்கள் முககவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News