ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2021-09-28 11:29 IST   |   Update On 2021-09-28 13:18:00 IST
இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரைபிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாடவீதிகளில் சாமி வீதிஉலா ரத்து செய்யப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரைபிரமோற்சவ விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக மாடவீதிகளில் சாமி வீதிஉலா ரத்து செய்யப்படுகிறது.

பிரம்மோற்சவ விழாவின்போது திருமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து மாடவீதியில் அமர்ந்து சாமி வீதி உலாவை கண்டு களிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு மாட வீதியில் சாமி வீதிஉலா ரத்து செய்யப்பட்டதால் கல்யாண மண்டபத்தில் உற்சவ மூர்த்திகள் வாகனத்தில் அலங்கார கொலுவிருக்க உள்ளனர். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண மின்விளக்கு அலங்காரம் மற்றும் மலர்கள் பழங்கள் கொண்டு அலங்காரம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

பிரமோற்சவ விழாவின் போது பக்தர்கள் வழக்கம்போல் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விழாவின்போது நடைபெற உள்ள வாகன சேவை பட்டியலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர் அதன்படி 7-ந்தேதி காலை கொடியேற்றம், மாலை பெரிய சே‌ஷ வாகன சேவையும், 8-ந்தேதி சின்ன சே‌ஷ வாகனம், மாலை அன்னப்பறவை வாகன சேவையும், 9-ந்தேதி சிம்ம வாகனம், மாலை முத்துப்பந்தல் வாகனமும், 10-ந்தேதி கல்ப விருட்ச வாகனம், மாலை சர்வ பூபால வாகனம், 11-ந்தேதி மோகினி அவதாரம், மாலை கருட வாகன சேவை நடைபெறுகிறது.

12-ந்தேதி அனுமந்த வாகனம், மாலை யானை வாகனம், 13-ந்தேதி சூரிய பிரபை வாகனம், மாலை சந்திர பிரபை வாகனம், 14-ந்தேதி காலை சர்வ பூபால வாகனம் இரவு குதிரை வாகனமும், 15-ந் தேதி காலை தெப்ப குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Similar News