ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு நாளில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு நாளில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

Published On 2021-09-21 08:17 GMT   |   Update On 2021-09-21 08:17 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் புனிதநீர் நிரப்பப்பட்ட ஒரு அண்டாவில் வேதமந்திரங்கள் முழங்க சுதர்சன சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 3 நாட்கள் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை 11 மணியில் இருந்து மதியம் 12.30 வரை மகாபூர்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்ப பிரதட்சணை, நைவேத்தியம், மாலை 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரை கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயார், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

இதையடுத்து பவித்ர புனிதநீர் நிரப்பப்பட்ட ஒரு அண்டாவில் வேதமந்திரங்கள் முழங்க சுதர்சன சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.

உற்சவத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி, இணை அதிகாரி சதாபார்கவி, கோவில் துணை கஸ்தூரிபாய், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News