ஆன்மிகம்

கிரகங்களும்.. உணவுகளும்..

Published On 2019-01-28 07:22 GMT   |   Update On 2019-01-28 07:22 GMT
ஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு. எந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.
ஒவ்வொருவருக்கும் தினசரி தேவைகளில் அத்தியாவசியமானது உணவு. நமக்கு தெரிந்த அளவு சத்தான உணவுகளை நாம் சாப்பிட்டு வருகிறோம். எந்த உணவை எந்தக் கிழமையில் சாப்பிட்டால் நல்லது என்பது பற்றி ஜோதிட ரீதியாக சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.

* ஞாயிறு- (சூரியன்): கோதுமை அல்வா, கோதுமை பாயசம், கோதுமை சாதம், சப்பாத்தி, பூரி, கேசரி, கேரட் அல்வா, மாதுளை ஜூஸ், கேரட் சூப், பரங்கிக்காய் சாம்பார்.

* திங்கள் - (சந்திரன்): பால், பால்கோவா, பால் பாயசம், லஸ்ஸி, மோர், பச்சரிசி சாதம், முள்ளங்கி, கோஸ் பொரியல், புட்டு, இடியாப்பம், இட்லி, தேங்காய் சாதம், கல்கண்டு சாதம், தயிர் சாதம்.

* செவ்வாய் - (அங்காரகன்): துவரம் பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சட்னி, வடை, பீட்ரூட் அல்வா, பேரீச்சை பாயசம், தர்பூசணி ஜூஸ், தேன் கலந்த செவ்வாழை, ஆப்பிள், ஆரஞ்சு பழக்கலவை, மிளகாய் துவையல்.

* புதன் - (புதன்): கீரை தோசை, கீரை, வேப்பம்பூ ரசம், பாகற்காய் தொக்கு, முருங்கைக்காய் சூப், பாசிப்பயறு சுண்டல், புதினா, கொத்தமல்லி சட்னி, வாழைப் பழம், கொய்யாப் பழம் சேர்த்த பழக்கலவை.

* வியாழன் - (குரு): சுக்கு காபி அல்லது கசாயம், சோளம் சூப், கடலைப்பருப்பு கூட்டு, கடலைப்பருப்பு வடை, தயிர் வடை, கொண்டைக்கடலை சுண்டல், சாத்துக்குடி, மாம்பழ ஜூஸ், பொங்கல், தயிர், எலுமிச்சை சாதம், மாதுளை, முந்திரி, திராட்சை, பேரீச்சை கலந்த தயிர் சாதம்.

* வெள்ளி - (சுக்ரன்): பால் இனிப்புகள், பால் பாயசம், காஷ்மீர் அல்வா, தேங்காய் பர்பி, வெண்ணெயில் செய்த பிஸ்கட், முலாம்பழ ஜூஸ், வெள்ளரி ஜூஸ், வாழைத்தண்டு ஜூஸ், இட்லி, தோசை, தேங்காய் சட்னி, கம்பு தோசை, ஆப்பம், அவியல், தயிர் சேமியா, புலாவ், கோஸ் சாம்பார், பூண்டு ரசம், வாழைத்தண்டு பொரியல், நீர் மோர், வெள்ளரி, பாசிப்பருப்பு சாலட்.

* சனி- (சனீஸ்வரன்): ஜிலேபி, எள் உருண்டை, அதிரசம், சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, கொள்ளு சுண்டல், எள்ளு சாதம், எள் சட்னி, கொள்ளு ரசம், மிளகு சாதம், மிளகு ரசம், உளுந்து சாதம், புளியோதரை, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு, நாவல் பழம், கருப்பு திராட்சை ஜூஸ், பாதாம், முந்திரி, திராட்சை, பேரீச்சை, பிஸ்தா கலவை.

இதில் கூறப்பட்ட பெரும்பாலான பதார்த்தங்கள் செய்யப்படும் அடிப்படை பொருட்களை பார்த்தால், அவை எல்லாமே அந்தந்த கிரகங்களுக்கு உரிய தானியங்களே. இவற்றில் உங்கள் வசதிக்கு தக்கபடி ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
Tags:    

Similar News