ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலின் கொடி கம்பத்தில் பிரதான அர்ச்சகர்கள் கொடியேற்றியபோது எடுத்தபடம்.

திருச்சானூர் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா தொடங்கியது

Published On 2018-12-05 06:21 GMT   |   Update On 2018-12-05 06:21 GMT
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. காலை 8.30 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடந்தது. முன்னதாக மஞ்சள் நிறத்திலான கொடியில் சிவப்பு நிறத்தில் யானை உருவம் வரையப்பட்ட கொடியை அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

கொடிமரத்துக்கு அர்ச்சகர்கள் ஸ்நாபன திருமஞ்சனம் செய்தனர். கொடியை கயிற்றில் இணைத்து, வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, பக்தர்கள் பக்தி கோ‌ஷம் முழங்க, பிரதான அர்ச்சகர்கள் கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியை ஏற்றினர். பின்னர் கொடிமரத்துக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் அனில் குமார் சிங்கால், இணை அதிகாரிகள் கே.எஸ்.சீனிவாசராஜு, போலா.பாஸ்கர், தேவஸ்தான முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கோபிநாத்ஜாட்டி, கூடுதல் பாதுகாப்பு அதிகாரி சிவக்குமார்ரெட்டி, உதவி அதிகாரி சுப்பிரமணியம், சூப்பிரண்டுகள் மல்லீஸ்வரி, குமார், கோபாலகிரு‌ஷ்ணா, உதவி பறக்கும்படை அதிகாரி நந்தீஸ்வரராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஆஸ்தான மண்டபத்தில் ஊஞ்சல் சேவை, இரவு 7 மணியில் இருந்து 8 மணிவரை சிறிய சே‌ஷ வாகனத்தில் உற்சவர் பத்மாவதி தாயார் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 10 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது.
Tags:    

Similar News