ஆன்மிகம்

மங்கலம் தரும் அங்காளம்மன் குங்குமம்

Published On 2018-09-28 09:41 GMT   |   Update On 2018-09-28 09:41 GMT
அங்களபரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்துத் தரப்படும் குங்குமம் பிரசாதத்தை யார் ஒருவர் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும்.
அங்களபரமேஸ்வரி ஆலயத்தின் கருவறையில் இருந்து எடுத்துத் தரப்படும் குங்குமம் பிரசாதத்துக்கு அளவற்ற சக்தி உண்டு. ஆத்மார்த்தமாக யார் ஒருவர் அந்த குங்குமத்தை தம் நெற்றியில் பூசிக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அங்காளம்மனின் மகத்துவம் புரியும். பொதுவாகவே குங்குமம் என்பது கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் மங்கலத்தை தரக்கூடியது. பெண்களின் தலை வகிட்டு நுனியில் லட்சுமி இருப்பதாக ஐதீகம். அதில் குங்குமம் வைப்பது பெண்களுக்கு மங்கலத்தை உண்டாக்கும்.

மேல்மலையனூரில் குங்கும பிரசாதம் பெறும்போது மிகவும் பணிவாக, பவ்வியமாகப் பெற வேண்டும். பிறகு அதை வலது கை மோதிர விரலால் எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்ள வேண்டும். இது எல்லா வித நன்மைகளையும் தரும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கட்டை விரலால் குங்குமம் அணிந்தால் தைரியம் பிறக்கும். ஆள்காட்டி விரலால் குங்குமம் பூசினால் நிர்வாகத்திறமை மேம்படும். நடுவிரலால் குங்குமம் வைத்துக் கொண்டால் ஆயுள் அதிகரிக்கும்.
Tags:    

Similar News