ஆன்மிகம்

திருப்பரங்குன்றத்தில் தங்கக்குதிரையில் முருகப்பெருமான் பவனி

Published On 2018-05-30 09:45 IST   |   Update On 2018-05-30 09:45:00 IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 19-ந்தேதி வைகாசி விசாக திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக மொட்டையரசு உற்சவம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 19-ந்தேதி வைகாசி விசாக திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று மொட்டையரசு உற்சவம் நடைபெற்றது.

விழாவையொட்டி காலை 9 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சாமி பல்லக்கில் புறப்பட்டு சன்னதி தெரு வழியாக சென்று கல்யாண விநாயகர் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்து மொட்டையரசு திடலுக்கு சென்றார்.

இதையொட்டி வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் மண்டபம் அமைத்திருந்தனர். அவற்றில் எழுந்தருளி சாமி பக்தர்களுக்கு அருள்புரிந்தார். தொடர்ந்து மொட்டையரசு திடலுக்கு சென்று அங்கு இரவு 10 மணி வரை தங்கியிருந்தார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சாமி பூப்பல்லக்கில் புறப்பட்டு இருப்பிடம் சேர்ந்தார்.
Tags:    

Similar News