ஆன்மிகம்

திருவரங்குளம் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி

Published On 2016-11-08 14:48 IST   |   Update On 2016-11-08 14:48:00 IST
திருவரங்குளம் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருவரங்குளத்தில் அமைந்துள்ள வரலாற்று புகழ் மிக்க அரங்குளலிங்கம் பெரியநாயகி அம்பாள் கோவிலில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சன்னிதானத்தில் தினமும் யாககால பூஜை சிறப்பு அபிசேக ஆராதனைகள் மூலவருக்கு தீபாராதனை, உச்சவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. ஆறாம் நாள் சூரனை வதம் செய்த நிகழ்ச்சியும் நடை பெற்றது.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மனியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஐதீக முறைப்படி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இரவு பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Similar News