ஆன்மிகம்

காமதேனு காயத்ரி மந்திரம்

Published On 2018-09-05 05:31 GMT   |   Update On 2018-09-05 05:31 GMT
காமதேனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.
ஓம் சுபகாயை வித்மஹே
காமதாத்ரியை சதீமஹி தந்தோ
தேனு: ப்ரசோதயாத்.

பசு காயத்ரி மந்திரம்:-

ஓம் பசுபதயேச வித்மஹே
மகா தேவாய தீமஹி
தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்.

பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும் ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும் நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது.

பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். இதில் இரண்டு பேர்கள் தாமதமாக வந்தார்கள். அவர்கள் மஹாலட்சுமியும் கங்கையும். பசுவின் உடலில் இவர்களுக்கு இடம் இல்லை.
Tags:    

Similar News