ஆன்மிகம்

பங்குனி உத்திரம் அன்று பாட வேண்டிய பாடல்

Published On 2017-04-08 06:25 GMT   |   Update On 2017-04-08 06:25 GMT
பங்குனி உத்திரமான நாளை முருகன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம். நாளை முருகனுக்கு விரதமிருந்து பாட வேண்டிய பாடலை கீழே பார்க்கலாம்.
பழனி என்ற பெயரை உச்சரிப்பதே மகத் தான புண்ணியம் தரும். அதனால் தான் குழந்தைகளுக்கு ‘பழனி’ என்று பெயரிட்டு அழைப்பது மரபாக உள்ளது. உடல் நோய், உள்ள நோய் என்று மட்டுமில்லாமல் பிறவிப்பிணி தீர்க்கும் ஞானதேசிகனாக தண்டாயுத பாணி ஞானதரிசனம் அளிக்கிறான். அவன் திருவடிகளே தஞ்சம் என்று சரண் புகுவோம்.

படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பவர் தான்
முடிக்கின்றிலை முருகா என்கிலை, முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள், விம்மி விம்மி
நவிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏதுநமக்கு இனியே!
என்று பங்குனி உத்திர நாளில் பாடி, முருகனின் அருள் பெறலாம்.

Similar News