ஆன்மிகம்

இன்று தை மாத கிருத்திகை விரதம்

Published On 2019-01-16 07:53 GMT   |   Update On 2019-01-16 07:53 GMT
இன்று விரதம் இருந்து முருகன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம்.
கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே! நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான்.

அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் யாவரும் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

தை மாதத்தில் வரும் கார்த்திகை விரதத்தை கடைபிடித்தால் நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். கஷ்டங்கள் தீரும். தை மாத கார்த்திகை விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மேலும் அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் மட்டும் அருந்தியும் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

இன்று விரதம் இருந்து முருகன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகன் அருள் பெறலாம். 
Tags:    

Similar News