ஆன்மிகம்

ஏகாதசியும் சிரார்த்தமும்

Published On 2018-12-31 06:34 GMT   |   Update On 2018-12-31 06:34 GMT
இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது. இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டும்.

ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படுபவர்களும் நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை.

சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது.
Tags:    

Similar News