டெஸ்ட் சாம்பியன்ஷிப் லைவ் அப்டேட்ஸ்: 234 ரன்களில் இந்தியா ஆல் அவுட்- சாம்பியன் பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா
முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 327 ரன்கள் குவித்தது.
ஆஸ்திரேலியா அணி 80 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 300 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. ஹெட் 128 ரன்களுடனும் ஸ்மித் 87 ரன்களுடனும் விளையாடி கொண்டிருக்கின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடந்து கொண்டிருக்கும் ஓவல் மைதானத்தில் பாஜக கொடி தொங்கவிடப்பட்டுள்ளது.
அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட், 106 பந்தில் சதம் அடித்து அசத்தினார். இதில் 14 பவுண்டரிகள், 1 சிக்ஸ் அடங்கும்.
ஆஸ்திரேலிய அணி 76 ரன்களுக்கு 3-வது விக்கெட் இழந்த நிலையில் ஸ்மித் - டிராவிஷ் ஹெட் ஜோடி சிறப்பான பார்டன்ஷிப்பை அமைத்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில் விக்கெட் பந்து வீச சொல்லி ஒரு சிறுவன் பலகையை ஏந்தி நின்றான். இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
டிராவிஸ் ஹெட் அரை சதம் அடித்து அசத்தினார். இவர் 60 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆடி கொண்டிருக்கிறார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்
25-வது ஓவரில் முகமது சமி பந்து வீச்சில் லாபுசேன் கிளின் போல்ட் ஆனார். இவர் 62 பந்துகளில் 26 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 பவுண்டரிகள் அடங்கும்.
உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 23 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளது.
22-வது ஓவரில் டேவிட் வார்னர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். இவரது விக்கெட்டை ஷர்துல் தாகூர் வீழ்த்தினார்.