கிரிக்கெட் (Cricket)

கமெண்ட்ரி பேனல் முழுக்க பிரபலங்கள்.. வெயிட்டிங்கை வெறியேற்றும் உலகக் கோப்பை Finals

Published On 2023-11-18 18:12 IST   |   Update On 2023-11-18 18:12:00 IST
  • உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதல்.
  • உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நெருங்கும் நிலையில், ரசிகர்கள் உச்சக்கட்ட பரபரப்பில் உள்ளனர். போட்டியின் போது சிறப்பு நிகழ்ச்சிகள், போட்டி நடுவர்கள் யார் யார் என்ற விவரங்கள் என போட்டி குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், போட்டியின் வர்ணனையாளர்கள் குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் போட்டியின் போது ஆங்கில மொழியில் வர்ணனையில் ஈடுபடுவர். இதில், கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பல்வேறு பிரபலங்கள் இடம்பெற்று உள்ளனர்.

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டிக்கு காஸ் நாயுடு, ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங், இயன் ஸ்மித், சஞ்சய் மஞ்ரேக்கர், ஆரோன் ஃபின்ச், நாசர் ஹூசைன், ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக், மாத்யூ ஹேடன், இயன் மோர்கன், இயன் பிஷப், ஷேன் வாட்சன், சுனில் கவாஸ்கர் மற்றும் மார்க் ஹோவர்ட் ஆகியோர் வர்ணனை செய்யவுள்ளனர். 

Tags:    

Similar News