கிரிக்கெட்

பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படுமா? இன்று ஆலோசனை

Update: 2023-02-04 05:43 GMT
  • இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை (ஒருநாள் போட்டி) செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.
  • பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டால் கத்தாரில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

பக்ரைன்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதுவரை 15 போட்டிகள் நடை பெற்றுள்ளன. இந்தியா அதிகபட்சமாக 7 முறையும், இலங்கை 6 தடவையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.

2016-ம் ஆண்டில் இருந்து 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி என மாறி மாறி ஆசிய கோப்பை நடத்தப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு எமிரேட்ஸ்சில் நடந்தது.

இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை போட்டியை (ஒருநாள் போட்டி) செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.

இந்திய அணியால் பாகிஸ்தானில் விளையாட முடியாததால் ஆசிய கோப்பை போட்டி பொதுவான இடத்துக்கு மாற்றப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளருமான ஜெய்ஷா அறிவித்து இருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அவசர கூட்டம் பக்ரைனில் இன்று நடக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜீம் சேதியின் வலியுறுத்தலின் பேரில் இந்த அவசர கூட்டத்தக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் ஆசிய கோப்பை போட்டி குறித்து முடிவு செய்யும்ம். பாகிஸ்தானில் போட்டி நடக்குமா? அல்லது பொதுவான இடத்துக்கு மாற்றப்படுமா? என்று தெரிய வரும்.

சமீபத்தில் உலக கோப்பை கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்திய கத்தார் ஆசிய கோப்பை போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து போட்டி மாற்றப்பட்டால் கத்தாரில் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Tags:    

Similar News