கிரிக்கெட்

எலிமினேட்டரில் விளையாடும் ஆர்சிபி அணி குறித்து விஜய் மல்லையாவின் பதிவு

Published On 2024-05-22 09:05 GMT   |   Update On 2024-05-22 09:05 GMT
  • ஆர்சிபி மற்றும் விராட் கோலியை தேர்வு செய்யும்போது இதைவிட சிறந்த தேர்வு இருக்க முடியாது என உள்ளுணர்வு சொன்னது.
  • தற்போது ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது என உள்ளுணர்வு சொல்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது விஜய் மல்லையா ஆர்சிபி அணியை ஏலத்தில் எடுத்தார். அதேபோல் விராட் கோலியையும் ஏலத்தில் எடுத்தார்.

இதுவரை ஆர்சிபி அணி மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மூன்று முறையும் தோல்வியை சந்தித்து ஏமாற்றம் அடைந்துள்ளது.

இந்த சீசனில் முதல் எட்டு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் முதல் அணியாக பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் அதாவது ஆறு போட்டிகளிலும் வெற்றிபெற்று, சென்னை அணிக்கெதிராக ரன்ரேட்டி அடிப்படையில் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதேஉத்வேகத்துடன் சென்றால் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய் மல்லையா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நான் ஆர்சிபி அணியை எடுப்பதற்காகவும், விராட் கோலியை எடுப்பதற்காகவும் ஏலம் கோரியபோது, என்னுடைய உள்ளுணர்வு என்னிடம், நான் அதைவிட சிறந்த தேர்வை தேர்வு செய்திருக்க முடியாது எனச் சொன்னது.

அதேபோல் தற்போது என்னுடைய உள்ளுணர்வு, இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்ல ஆர்சிபி-க்கு சிறந்த வாய்ப்பு என என்னிடம் சொல்கிறது. முன்னோக்கி, மேல்நோக்கி செல்ல பெஸ்ட் ஆஃப் லக்..

இவ்வாறு விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News