கிரிக்கெட்

என்ன ஒரு ஒற்றுமை.. 2024 WPL - IPL இறுதி போட்டியில் நடந்த சுவாரஸ்யம்

Published On 2024-05-27 06:20 GMT   |   Update On 2024-05-27 06:20 GMT
  • இரு தொடரின் இறுதி போட்டியில் இந்திய கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மோதின.
  • மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக மெக் லானிங் இடம்பெற்றிருந்தனர்.

சென்னை:

17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஐதராபாத் சன்ரைசர்சும் மோதின. 'டாஸ்' ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இதில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 113 ரன்னில் சுருண்டது. கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது.

இந்நிலையில் மகளிர் ஐபிஎல் 2024 மற்றும் ஆடவர் ஐபிஎல் 2024 இறுதி போட்டியில் ஒரே மாதிரியான சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அது என்னவென்றால் இரு தொடரின் இறுதி போட்டியில் இந்திய கேப்டன்கள் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டன்கள் மோதின. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக மெக் லானிங் இடம்பெற்றிருந்தனர்.

அதேபோல ஆடவர் ஐபிஎல் தொடரில் இந்திய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐய்யர் மற்றும் ஆஸ்திரேலிய கேப்டனாக பேட் கம்மின்ஸ் இடம்பெற்றிருந்தார். இரு தொடர்களிலும் இந்திய கேப்டன்களே கோப்பை வென்று அசத்தினர்.

மேலும் இரு தொடரின் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இரு ஆஸ்திரேலிய கேப்டன்கள் பேட்டிங்கை தேர்வு செய்தனர். அப்படி முதலில் ஆடிய இரு அணிகளும் 10.3 ஓவரில் 113 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய கேப்டன்கள் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு தொடர்களிலும் 4 விஷயங்கள் ஒற்றுமையாக உள்ளது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News