கிரிக்கெட்

மந்தனா - கவூர்

null

2-வது டி20: இலங்கை பெண்கள் அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா

Published On 2022-06-25 12:28 GMT   |   Update On 2022-06-25 12:35 GMT
  • கவூர் 31 ரன்கள் எடுத்து இந்த போட்டிக்கான சிறந்த வீராங்கனை விருதை தட்டிச் சென்றார்.
  • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்திய-இலங்கை பெண்கள் அணிக்கான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணி களமிறங்கி ஆடியது. 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விஷ்மி குணரத்னே 45 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. ஸ்மிரிதி மந்தனா-ஷவாலி வர்மா ஜோடி களமிறங்கினர். அதிரடியாக விளையாடி ஷவாலி வர்மா 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த மேகனா 17 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் அவுட் ஆனார்.

இதனையடுத்து மந்தனா-கவூர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 34 பந்தில் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டெம்பிங் முறையில் மந்தனா விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 3, பாட்டியா 13 என வெளியேறினர்.

கடைசி வரை நிதானமாக விளையாடிய கவூர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். 19.1 ஓவரில் 127 ரன்கள் எடுத்து இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கவூர் 31 ரன்கள் எடுத்து இந்த போட்டிக்கான சிறந்த வீராங்கனை விருதை தட்டிச் சென்றார்.

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

Tags:    

Similar News