கிரிக்கெட்

பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்- இந்திய வீரர்களில் புதிய சாதனை படைத்த பும்ரா

Published On 2022-07-04 09:00 GMT   |   Update On 2022-07-04 09:00 GMT
  • 5-வது டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
  • 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார்.

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 5-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 3-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று 3 மணிக்கு தொடங்கும்.

3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளது. இந்த டெஸ்ட்டில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்கள் பட்டியலில் பும்ரா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதற்கு அடுத்தப்படியாக புவனேஸ்வர் குமார் உள்ளார். அவர் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக 19 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

3-வது இடத்தில் ஜாகீர் கான்(2007), இஷாந்த சர்மா(2018) 18 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

Tags:    

Similar News