கிரிக்கெட்

டி20 கிரிக்கெட் தரவரிசையில் சூர்யகுமார் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்

Update: 2022-09-29 05:03 GMT
  • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (799 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார்.
  • பந்து வீச்சாளர் தரவரிசையில் புவனேஷ்வர் குமார் 10-வது இடத்தில் உள்ளார்.

துபாய்:

20 ஓவர் கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசைபட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (861 புள்ளி) 'நம்பர் ஒன்' இடத்தில் நீடிக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் 69 ரன்கள் விளாசிய இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் (801 புள்ளி) ஒரு இடம் முன்னேறி மீண்டும் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (799 புள்ளி) 3-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு இடம் உயர்ந்து 13-வது இடத்தையும், விராட் கோலி 15-வது இடத்தையும், லோகேஷ் ராகுல் 4 இடம் சறுக்கி 22-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் (737 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்சி (716 புள்ளி) 2-வது இடத்திலும் தொடருகிறார்கள். இந்திய தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் 10-வது இடம் வகிக்கிறார்.

Tags:    

Similar News