கிரிக்கெட் (Cricket)

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: தொடக்க வீரரை அறிவித்த ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர்

Published On 2024-01-10 14:02 IST   |   Update On 2024-01-10 14:02:00 IST
  • ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
  • கேமரூன் கிரீன் 4-வது வரிசையில் விளையாடுகிறார். மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அடிலெய்டு:

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதனால் அவர் இடத்தில் தொடக்க வீரராக யார் ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் விளையாடுகிறார்.

வெஸ்ட்இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மூன்று 20 ஓவரில் விளையாட ஆஸ்திரேலியா சென்று உள்ளது. முதல் டெஸ்ட் வருகிற 24-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க வீரராக ஆடுவார் என்று ஆஸ்திரேலிய தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி உறுதிப்படுத்தியுள்ளார். வார்னர் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் தொடக்க வீரராக விளையாட ஸ்டீவ் ஸ்மித் விருப்பம் தெரிவித்து இருந்தார். தற்போது அவரது கனவு நனவாகுகிறது.

கேமரூன் கிரீன் 4-வது வரிசையில் விளையாடுகிறார். மேத்யூ ரென்ஷா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்டுக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-

கம்மின்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் கிரீன், லபுஷேன், மிச்சேல் மார்ஷ், டிரெவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, ரென்ஷா, ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலண்டு, ஹாசல்வுட்.

Tags:    

Similar News