கிரிக்கெட் (Cricket)

உலகக்கோப்பை போட்டி- தென் ஆப்பிரிக்காவுக்கு 246 ரன்கள் இலக்கு நிர்ணயம்

Published On 2023-10-17 20:28 IST   |   Update On 2023-10-17 20:28:00 IST
  • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.
  • நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும் 2.30 மணிக்கு போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2.30 டாஸ் போடப்படும் எனவும் 3 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2.20 மணிக்கு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடவுட் களமிறங்கினர். இதில், விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

பின்னர், ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டெர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கி உள்ளது.

Tags:    

Similar News