கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா 100 ரன்கள் முன்னிலை- விக்கெட் எடுக்க முடியாமல் திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்

Published On 2023-12-28 10:08 GMT   |   Update On 2023-12-28 10:08 GMT
  • யான்சன் அரை சதம் விளாசினார்.
  • டீன் எல்கர் 190 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

செஞ்சூரியன்:

தென் ஆப்பிரிக்கா, இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 14 பவுண்டரி, 4 சிக்சருடன் சதமடித்து 101 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரம் 5 ரன்னில் அவுட்டானார். சோர்சி 28 ரன்னிலும், பீட்டர்சன் 2 ரன்னிலும் டேவட் பெடிங்காம் 56 ரன்னிலும் வெளியேறினார். டீன் எல்கர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார்.

இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 66 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் சேர்த்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. டீன் எல்கர் 140 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்நிலையில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. யான்சன் - எல்கர் ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக விளையாடினர். அஸ்வின் பந்து வீச்சில் யான்சனுக்கு ஒரு கேட்ச் வாய்ப்பு கிடைத்தது. அதனை ராகுல் தவறவிட்டார். இதனால் அவர் அரை சதம் விளாசினார்.

தற்போது வரை தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 360 ரன்கள் எடுத்ததுள்ளது. 

Tags:    

Similar News