கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல்- திருப்பூர் அணிக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது சேலம் ஸ்பார்டன்ஸ்

Published On 2023-07-01 17:01 IST   |   Update On 2023-07-01 17:01:00 IST
  • ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.
  • சன்னி சந்து அரை சதம் அடித்து 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

7-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இன்று இரண்டு லீக் போட்டிகள் நடக்கிறது.

இன்று மாலை 3.15 மணிக்கு நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி சேலம் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.

இந்த போட்டியில் முதலாவதாக அரவிந்த் மற்றும் கவுஷிக் காந்தி பேட்டிங் செய்தனர். இதில், கவுஷிக் முதல் பந்துலேயே ஆட்டமிழந்தார். இதேபோல், அரவிந்த் ஒரு ரன்னில் அவுட்டானார்.

இவர்களை தொடர்ந்து ஆர்.கவின் 19 ரன்களும், மோகித் ஹரிஹரன் 3 ரன்களும், அபிஷேக் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து, சன்னி சந்து அரை சதம் அடித்து 61 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். முகமது அத்னான் கான் 15 ரன்களும், அபிஷேக் தன்வர் 17 ரன்களும் ஆகாஷ் சும்ரா 7 ரன்களு் எடுத்தனர்.

இறுதியாக ஜகநாத் ஸ்ரீநிவாஸ் 11 ரன்களுடன் அவுட்டானார். செல்வா குமரன் ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியின் முடிவில் சேலம் அணி 20 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை குவித்தது.

இதைதொடர்ந்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என் இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்க உள்ளது.

Tags:    

Similar News