கிரிக்கெட்

இறுதிப் போட்டியில் 47 பந்தில் 96 ரன்கள் விளாசி பல்வேறு சாதனைகள் படைத்த இளைஞர் சாய் சுதர்சன்

Published On 2023-05-29 17:18 GMT   |   Update On 2023-05-29 17:18 GMT
  • சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தின் மூலம் 21 வயது 226 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
  • சுப்மான் கில் 22 வயது 37 நாட்களிலும் ரிஷப் பண்ட் 23 வயது 37 நாட்களிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

குஜராத் டைட்டன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் எம். எஸ் டோனி.

அவர் நினைத்தவாறு பந்துவீச்சு அமையாத காரணத்தினால் குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் மட்டுமே இழந்து 214 ரன்கள் குவித்தது.

சுப்மான் கில்தான் அதிகமாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இளம் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடி 47 பந்தில் 96 ரன்கள் குவித்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை பதிவு செய்துள்ளார் சாய் சுதர்சன்.

ஐபிஎல் போட்டியில் மிக இளம் வயதில் 50 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு முன் 20 வயது 318 நாட்களில் மனன் வோரா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தின் மூலம் 21 வயது 226 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

சுப்மான் கில் 22 வயது 37 நாட்களிலும் ரிஷப் பண்ட் 23 வயது 37 நாட்களிலும் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

வாட்சன் 2018-ம் ஆண்டு ஆட்டம் இழக்காமல் 117 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார்.

சகா 2014-ம் ஆண்டு 115 ரன்கள் அடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

தற்போது சுதர்சன் 96 ரன்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

மற்றொரு தமிழக வீரரான முன்னாள் வீரர் முரளி விஜய் 2011-ம் ஆண்டு 95 ரன்கள் குவித்து 4-வது இடத்தில் உள்ளார்.

மனிஷ் பாண்டே 94 ரன்கள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

இந்திய அணிக்கு விளையாடாத வீரர் ஒருவர் பிளே ஆப்ஸ் சுற்றில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

ஆர்சிபி வீரர் ராஜத் படித்தார் சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News