கிரிக்கெட் (Cricket)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர்- இந்திய அணியில் இடம் பிடித்த பராக்?
- சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக பராக் விளையாடினார்.
- 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார்.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நவம்பர் 19-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த தொடர் முடிவடைந்த பிறகு இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் முறையாக ரியான் பராக் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் இந்திய அணியில் இடம் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் சையத் முஷ்டாக் அலி தொடரில் அசாம் அணிக்காக விளையாடினார். 10 போட்டிகளில் விளையாடிய அவர் 85.00 சராசரியில் 510 ரன்கள் எடுத்துள்ளார். முஷ்டாக் அலி டிராபியில் நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் (182.79) பராக் அதிக ரன் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.