கிரிக்கெட் (Cricket)

ரச்சின் ரவீந்திரா - பெயர்க்காரணத்தை விளக்கிய நியூசிலாந்து வீரர்

Published On 2023-10-07 10:43 IST   |   Update On 2023-10-07 10:43:00 IST
  • முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 282 ரன்கள் சேர்த்தது.
  • அடுத்து ஆடிய நியூசிலாந்து 283 ரன்கள் எடுத்து வென்றது.

அகமதாபாத்:

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 282 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட்

77 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து 36.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டேவிட் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர்.

இந்நிலையில், வெற்றிக்குப் பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திரா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

எனது பெற்றோர் பிறந்த ஊர் பெங்களூர். உண்மையில் அங்கு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக பெங்களூருவில் விளையாட இருக்கிறேன். இந்தப் போட்டியில் எனக்கு ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்.

பெங்களூர் என்றால் எனது குடும்பம் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் நான் பெங்களூரில் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளேன்.

தந்தை ரவி கிருஷ்ணமூர்த்திக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகமாக இருந்தது. இதனால்தான் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் நினைவாக எனக்கு ரச்சின் ரவீந்திரா என்ற பெயரை சூட்டினார் என தெரிவித்தார்.

Tags:    

Similar News