கிரிக்கெட்

ரிஷப் பண்ட்

வெளிநாடுகளில் அதிக ரன் குவிப்பு - 69 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

Published On 2022-07-04 21:02 GMT   |   Update On 2022-07-04 21:02 GMT
  • பர்மிங்காம் டெஸ்டின் இரு இன்னிங்சிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 203 ரன்கள் எடுத்துள்ளார்.
  • இதில் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடங்கும்.

பர்மிங்காம்:

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிஷப் பண்ட் 146 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 104 ரன்களையும் குவித்தனர்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 245 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. புஜாரா 66 ரன்னும், ரிஷப் பண்ட் 57 ரன்னும் எடுத்தனர்.

இந்த டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் 146 ரன்னும், 2-வது இன்னிங்சில் 57 ரன்னும் எடுத்துள்ளார். இதன்மூலம் வெளிநாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார்.

இதற்கு முன் 1953-ம் ஆண்டு விஜய் மஞ்சரேக்கர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக கிங்ஸ்டன் டெஸ்ட் போட்டியில் 161 ரன்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது.

இந்த டெஸ்டில் மொத்தமாக 203 ரன்கள் எடுத்துள்ள ரிஷப் பண்ட், 69 ஆண்டுக்குப் பிறகு இந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Tags:    

Similar News