கிரிக்கெட்

139 பந்தில் 210 ரன்கள்.. 24 ஆண்டு சாதனையை முறியடித்த பதும் நிசங்கா

Published On 2024-02-09 16:09 GMT   |   Update On 2024-02-09 16:09 GMT
  • ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
  • மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களை குவித்தது.

இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையே முதல் ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 9) நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்களை குவித்தது.

இலங்கை சார்பில் அதிரடியாக ஆடிய பதும் நிசங்கா ஆட்டமிழக்காமல் 210 ரன்களை குவித்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் இலங்கை அணி வீரர் என்ற பெருமையை நிசங்கா பெற்றிருக்கிறார். இவருடன் களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னான்டோ 88 ரன்களையும் குவித்தார். அடுத்து வந்த குசல் மென்டிஸ் 16 ரன்களையும் சதீரா சமரவிக்ரமா 45 ரன்களை எடுத்தனர்.

இந்த போட்டியில் இரட்டை சதம் விளாசிய பதும் நிசங்கா ஒருநாள் கிரிக்கெட்டில் சனத் ஜெயசூர்யா சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சனத் ஜெயசூர்யா 189 ரன்களை குவித்ததே ஒருநாள் போட்டிகளில் இலங்கை வீரர் குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது.

Tags:    

Similar News