ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு மாற்றத்துடன் பாகிஸ்தான் பந்து வீச்சு தேர்வு
- இவ்விரு அணிகளும் இதுவரை 107 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- இதில் 69-ல் ஆஸ்திரேலியாவும், 34-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன.
பெங்களூரு:
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 18-வது லீக்கில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானுடம் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக உஸ்மா மிர் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 107 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 69-ல் ஆஸ்திரேலியாவும், 34-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் 'டை' ஆனது. 3 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
பெங்களூரு சின்னசாமி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமானதாகும். அத்துடன் பவுண்டரி அளவும் சிறியது என்பதால் இந்த ஆட்டத்தில் ரன் மழைக்கு பஞ்சமிருக்காது.
இரு அணிகளின் லெவன்:-
ஆஸ்திரேலியா:
மிட்செல் மார்ஷ், வார்னர், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஜம்பா, ஹேசில்வுட்.
பாகிஸ்தான்:
அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, உஸ்மா மிர், முகமது நவாஸ், ஹசன் அலி, அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.