கிரிக்கெட்

ஆசிய கோப்பை போட்டியை இரு நாட்டில் நடத்துவதா? இது எனக்கு பிடிக்கவில்லை- பிசிபி புதிய தலைவர்

Published On 2023-06-23 06:54 GMT   |   Update On 2023-06-23 06:54 GMT
  • இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது.
  • இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.

லாகூர்:

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜம் சேத்தியின் பரிந்துரைப்படி இந்த போட்டி தற்போது இரு நாடுகளில் நடத்தப்படுகிறது.

ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் 4 ஆட்டங்கள் பாகிஸ்தானிலும், இறுதிப்போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நடத்தப்படுகிறது.

இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் முடிவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக விரைவில் பொறுப்பு ஏற்க உள்ள ஜாகா அஷ்ரப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்:-

இரு நாடுகளில் ஆசிய கோப்பை கிரிக்கெட் நடக்க இருப்பது பாகிஸ்தானுக்கு பலன் தராது. எனக்கும் இது பிடிக்கவில்லை.

ஆசிய கோப்பை போட்டியை நடத்தும் உரிமம் பாகிஸ்தானிடம் இருப்பதால் போட்டி முழுவதையும் பாகிஸ்தானிலேயே நடத்தும் வகையில் இன்னும் அதிக முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும். அதுவும் இலங்கையில் அதிக ஆட்டங்களும், பாகிஸ்தானில் குறைவான ஆட்டங்களும் நடப்பது தேசத்தின் நலனுக்கு நல்லதல்ல.

ஆனால் ஆசிய கோப்பை போட்டி குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு விட்டதால் இனி அதை பின்பற்றிதான் ஆக வேண்டும். அதற்கு இடையூறு செய்ய மாட்டேன்' என்றார்.

Tags:    

Similar News