கிரிக்கெட்

ஆர்சிபி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதை கொல்கத்தா விரும்பாது: வருண் ஆரோன்

Published On 2024-05-22 11:32 GMT   |   Update On 2024-05-22 11:32 GMT
  • ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள்.
  • யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

ஐபிஎல் 2024 சீசன் பிளேஆஃப் சுற்றுகள் நேற்று தொடங்கியது. குவாலிபையர்-1ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேறுமா? என்ற கேள்வி இருந்த நிலையில், தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ஆர்சிபி தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், கொல்கத்தா அணி இறுதிப் போட்டியில் ஆர்சிபியை எதிர்கொள்வதை விரும்பாது என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வருண் ஆரோன் கூறியதாவது:-

இந்தமுறை சாம்பியன் படத்தை வெல்ல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், போட்டி நடைபெறும் அன்றைய தினத்தில்தான் ரிசல்ட் முடிவு செய்யப்படும். உங்களுடைய அணி சிறந்ததா? அல்லது மோசமானதா? என்பது விசயம் அல்ல. ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விரும்பும் என நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களின் உத்வேகம். ஆர்சிபி இறுதிப் போட்டிக்கு முன்னேறினால், கோப்பை தங்களுடைய என்று அவர்கள் நம்புவார்கள். யாரும் அவர்களை தடுத்து நிறுத்த முடியாது.

இன்னும் முக்கியமான போட்டிகள் உள்ளன. இறுதிப் போட்டிக்கான நெருக்கடி முற்றிலும் மாறுபட்டது. இறுதிப் போட்டிக்கு முன்னேறுவரை கொல்கத்தா விரும்பாது. ஏனென்றால், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற விருபத்துடன் விளையாடி வருகின்றனர்.

இவ்வாறு வருண் ஆரோன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News