கிரிக்கெட்

மழை காரணமாக ஐ.பி.எல் இறுதிப்போட்டி ரத்து- நாளை நடைபெறும் என அறிவிப்பு

Published On 2023-05-28 17:38 GMT   |   Update On 2023-05-28 17:57 GMT
  • ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கிரிக்கெட் மைதானத்திற்கு போட்டியை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறி வருகின்றனர்.

ஐ.பி.எல் 2023 தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத இருந்தன.

இன்று மாலை 7.30 மணியளவில் டாஸ் போட இருந்த நிலையில், கனமழை காரணமாக டாஸ் போடுவது ஒத்தி வைக்கப்பட்டது.

இரவு 9.30 மணிக்கு முன்னதாக மழை நின்றால் போட்டி 20 ஓவர்களுக்கு தொடரும் என்றும், இரவு 12 மணிக்குள் மழை நின்றால் போட்டி 5 ஓவர்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அகமதாபாத்தில் இன்னும் மழை முழுவதுமாக நிற்காத நிலையில், ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரிசர்வ் டே முறைப்படி ஆட்டம் நாளை மாலை 7.30 மணிக்கு நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளையும் போட்டி நடைபெறும் சூழல் இல்லாதபட்சத்தில் புள்ளிப் பட்டியலில் முதல் இடம் வகிக்கும் குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதனால், கிரிக்கெட் மைதானத்திற்கு இறுதிப்போட்டியை காண ஆவலுடன் வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

Tags:    

Similar News